இலக்கண குறிப்பை எளிய முறையில் கண்டறிய பயன்படும் முறைகள் பகுதி - 2

     இலக்கண குறிப்பு


உம்மைத்தொகை:

1.இருசொற்களின் இறுதியில் "உம்" எனும் இடைசொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.

2. இரு சொற்களும் ஒன்றோடுஒன்று தொடர்புடையதாக இருக்கும்.

3. . கா.தாய்சேய் (தாயும் சேயும்) என மறைந்து பொருள் தருகின்றன.


அன்மொழித்தொகை:

1. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து வந்து பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.

2. .கா. சிவப்புச் சட்டை வந்தார்.


உருபும் பயனும் உடன்தொக்க தொகை:

1. இரு சொற்களின் இடையே ஒரு வேற்றுமைஉருபும் அதன் பொருளை உணர்த்தவரும் பயனிலையும் மறைந்து இருக்கும்.

2. .கா.தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) இதில் "கு" எனும் நான்காம் வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வந்துள்ளது.


பெயெரெச்சம்:

1. முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லை கொண்டு முடியும்.

2. சொல், "" அல்லது "உம்" என்னும் ஓசையில் முடியும்.

3. .கா. கேட்ட பாடல் -'கேட்ட' எனும் எச்சவினை 'பாடல்' எனும் பெயர்ச்சொல்லை கொண்டு முடிந்துள்ளது.

எதிர்மறை பெயரெச்சம்:

1. முதல் சொல் எதிர்மறை பொருளை உணர்த்தும் எச்சவினையாகவும், அடுத்தசொல் பெயர்ச்சொல்லாகவும் அமையும்.

2. முதல் சொல் '' எனும் ஓசையில் முடியும். .கா. கேட்காத பாடல், தீராத வறுமை

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:

1. முதல் சொல் எதிர்மறை பொருளை உணர்த்தும் எச்சவினையாவும், அதன் இறுதி எழுத்து கெட்டும், அடுத்தசொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்.

2. முதல் சொல் '' எனும் ஓசையில் முடியும். .கா. கூடா நட்பு

வினையெச்சம்:

1.முற்று பெறாத வினை, வினைச்சொல்லை கொண்டு முடியும்.

2. முதல் சொல் பெரும்பாலும் "", “", “" எனும் ஓசையில் முடியும்.

3. .கா. வந்த பையன், பாடி மகிழ்ந்தனர், நடந்து சென்றான்.

எண்ணும்மை:

1. இருசொற்கள் ஒன்றோடுஒன்று தொடர்புடையதாகவும், “உம்" என்னும் சொல் வெளிப்படையாகவும் வரும்.

2. .கா. வண்ணமும், சுண்ணமும்

கண்ணும், கருத்தும்

முற்றும்மை:

1. சொற்கள் முழுமையாக தொகுக்கப்பட்டிருக்கும். “உம்" என்னும் எழுத்து சொல்லின் இறுதியில் வெளிப்படையாக வரும்.

2. .கா. அனைவரையும், யாவரையும்


வியங்கோள் வினைமுற்று:

1. ‘',’ இய', ‘இயர்', ‘அல்' இவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

2. சில இடங்களில் "", “" என்றும் முடியும்.

3. வாழ்த்துதல், வைத்தல், வேண்டுதல், விதித்தல் என்னும் பொருள்களில் மரியாதை ஏவல் வினைமுற்றாக வரும். .கா. செய்க- க வாழி - இ வாழிய – இய வாழல் - அல்


டுக்குத்தொடர்:

1. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுத்தடுத்து அடுக்கி வரும்.

2. பிரித்தால் பொருள் தரும். .கா. வருக! வருக! வருக!

3. விரைவு, அச்சம், கோபம்,மகிழ்ச்சி, துன்பம் இவற்றுள் ஒரு பொருளை உணர்த்தும்.


இரட்டைக்கிளவி:

1. ஒரு சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வரும்.

2. பிரித்தால் பொருள் தராது.

3. .கா. கலகல, சலசல


உரிச்சொல்:

1. சால, உறு, தவ, நனி, கூர், கழி, மா, தட, , மழ, குழ, தெவ், வை, கெழு - இவற்றிள் ஏதாவது ஒன்று பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் முன் வரும்.

2. . கா. சாலச் சிறந்தது, மாமதுரை


உருவகம்:

1. உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமைந்து இருக்கும்.

2. “ஆகிய", "என்னும்" போன்ற சொற்கள் வெளிப்படையாகவோ, அல்லது மறைந்தோ வரும்.

3. .கா. கண்ணீர் வெள்ளம்

No comments

Popular Posts

Powered by Blogger.