இலக்கண குறிப்பை எளிய முறையில் கண்டறிய பயன்படும் முறைகள் பகுதி - 1



இலக்கண குறிப்பு

அளபெடை:
பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம், அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.

.கா. அம்மாஅ, தம்பீஇ,தல், கெடுப்பதூஉம்.
இதில் , , , என்னும் உயிரெழுத்துக்கள் சொல்லின் இறுதியிலும் நடுவிலும் வந்துள்ளன. இவ்வாறு வந்தால் அளபெடை என்கிறோம்.

செய்யுளிசை அளபெடை:

 ஓ தல் வேண்டும், உறாஅர்க்கு, நல்லபடாஅ பறை
 இவ்வாறு செய்யுளில் ஒசை குறையும்போது அதனை        
 நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை எனப்படும். இவற்றை சைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

இவற்றில் "" தவிர பிற உயிரெழுத்துக்கள் அளபெடுக்கும். ஈரசைச் சீராகவும் வரும்.

இன்னிசை அளபெடை:

1. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும்.
2. சொல்லின் இடையில் "" என்னும் உயிரெழுத்து இருக்கும்.
3. சொல் மூவசைச் சீராக வரும்..கா கெடுப்பதூஉம்

சொல்லிசை அளபெடை:

1. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
2. " என்னும் உயிரெழுத்து சொல்லின் இறுதியில் வரும்.
3. அந்த உயிரெழுத்தை நீக்கினால்,அச்சொல் ஓரசைச் சீராக இருக்கும்.
.கா. தழீஇ, ஓரீஇ

தொழிற்பெயர்:

1. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் இடம் காலம் பால் ஆகியவற்றைக் வெளிப்படையாகவோ அல்லது குறிப்பாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
2. தொழிலை மட்டும் குறிக்கும்.
3. தல், அல், கை, , வை, ஆல், அம், மை, து, கு, பு, , தி, சி, வி, உள், பாடு, காடு இவற்றில் ஒன்றை விகுதியாக பெற்று வரும்.

வினையாலணையும் பெயர்:

1. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறோரு பயனிலைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.
2. தன்மை, முன்னிலை,படர்க்கை இடங்களில் வரும்.
3. மூன்று காலங்களிலும் வரும்.
4. . கா. வந்தவர் அவர்தான்

வேற்றுமைத்தொகை:

1. வேற்றுமை உருபு எட்டு வகைப்படும்.முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
2. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள், ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைதொகை எனப்படும்.
3. .கா. மதுரை சென்றார். இதில்" கு "எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.

வினைத்தொகை:

1. முதல் சொல் வினைசொல்லாகவும், இரண்டாம் சொல் பெயர்ச்சொல்லாவும் வருவது வினைத்தொகை எனப்படும்.
2. வினைசொல்லும் பெயர்ச்சொல்லும் இணைந்து வரும்.இருசொற்களுக்கு இடையில் மூன்றுகாலமும் மறைந்திருக்கும்.
3. . கா. வீசும்தென்றல், திருந்தும் மொழி

பண்புத்தொகை:

1. நிறம், வடிவம், சுவை, அளவு ஆகிய பண்புகளுள் ஒன்றை பகுதியாகவும், பெயர்ச்சொல்லை விகுதியாகவும் பெற்று வரும்.
2. பண்புசொல்லுக்கும், பெயர்ச்சொல்லுக்கும் இடையில் ஆகிய, ஆன என்ற உருபு மறைந்திருக்கும்.
3. பண்புசொல்லை பிரிக்கும்போது நிலைமொழியின் ஈறு" மை "என முடியும்.
4. .கா. செந்தமிழ்- செம்மை+ தமிழ்

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:

1. இருபெயர்ச்சொற்கள் ஒன்றாக சேர்ந்து வரும். முதல்சொல் சிறப்புப்பெயராகவும், இரண்டாம் சொல் பொதுப்பெயராகவும் நின்று இடையில் "ஆகிய" என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
2. .கா. மார்கழித் திங்கள் மார்கழி-சிறப்புப்பெயர், திங்கள்- பொதுப்பெயர்

உவமைத்தொகை:

1. உவமைக்கும் பொருளுக்கும்(உவமேயம்) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
2. இருசொற்களுக்கு இடையில் "போன்ற" என்னும் உவம உருபு மறைந்து வரும்.
3. .கா மலர்க்கை (மலர் போன்ற கை) மலர்-உவமை கை- உவமேயம் இதில் 'போன்ற' என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது.

No comments

Popular Posts

Powered by Blogger.