NMMS SAT Study Material - 01

NMMS Study Material


Seventh Social Science - 01


 Special Guide 


Click here to download

Nmms study material தரவிறக்கம் செய்பவர்கள் வாய்ப்பு இருப்பின் கீழுள்ள கதையை படியுங்கள்
         

            சமீபத்தில் ஒரு டிஜிட்டல் தராசு வாங்கினேன். அவ்வப்போது வீட்டுக்கு வாங்கும் பொருள்களை அதில் அளவிட்டுப் பார்ப்பேன். அப்படி அளவிடும் போது பெரும்பாலான 100 கிராம் பொருள்கள் சரியாக 100 கிராம் என காட்டுவதில்லை. அதில் பிழை இருப்பது இயல்பு. பிழைகள்  + அல்லது – ல் இருக்க வேண்டும். சில பொருள்களின் எடை 90 கிராமுக்கும் 100 கிராமுக்கும் இடையே உள்ள ஒரு மதிப்பை காட்டினால். மேலும் சில பொருள்கள் 100 கிராமுக்கும் 110 கிராமுக்கும் இடைப்பட்ட மதிப்பை காட்டவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதனை பிழை என நாம் கருத முடியும்.




            ஆனால் நான் அளவிட்டுப் பார்த்த பெரும்பாலான நிறைகள் 90 லிருந்து 99 கிராம் அளவினையே காட்டியது (உறைகளை தவிர்த்து). உறைகள் இல்லாமல் கடைகளில் தராசுக்களில் நிறுத்து வாங்கப்படும் பொருள்களின் நிறைகள் சில ( 100 கிராம் பொருளை வாங்கினால்) 100 கிராமுக்கு அதிகமாகவே இருக்கிறது. உறையிலிட்டு வாங்கப்படும் பொருளில் நிறை சற்று குறைந்திருந்தாலும் (உதாரணம்:தேயிலை) அதை நாம் கவனிப்பதில்லை என நினைத்து அதன் அளவை சரியான நிறையிலிருந்து சற்று குறைத்தே உறைகளில் பொதிந்து விற்பனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். 





    கத்திரிக்காய் வாங்குகிறோம். ஒரு கிலோ நாற்பது ரூபாய்க்கு பேரம் பேசாமல் வாங்கிச்   செல்கிறோம். ஒரு கிலோ கத்திரிக்காயில் இரண்டு கத்தரிக்காயினுள் கேடாக இருந்தால் மீதமுள்ள நல்ல கத்தரிக்காய்களின் எடை 800 கிராம் தான். ஆனால் அவர் ஒரு கிலோ என நமக்கு தருகிறார். 


தேநீர் கடையில் கண்ணாடி டம்ளரில் டீ வாங்கிக் குடிப்போம்.  10 செமீ நீளமுள்ள டம்ளரின் உட்பகுதியில் 3 செமீ நீளத்திற்கு கண்ணாடியைக் கொண்டு மூடியிருப்பார்கள். 10 செமீ நீள டம்ளரில் டீ தருவதாக கூறி 7 செமீ நீளமுள்ள அளவுக்குத் தான் டீ தருகிறார்கள்.



        ஒரு தராசில் துலாக்கோலின் நீளம் சரியாக பகுக்கபடாமல் இருக்கும் போது (முனை மழுங்கி இருந்தால்) முதலில் அந்த தட்டு தாழும்படி நிறைய பொருள்களை போட்டுவிடுவார்கள். பின்பு சில பொருள்களை எடுத்தாலும் அந்த தட்டு மேலே உடனே வராது. துலாக்கோல் உடனடியாக  சமநிலையில் வராமல் இருக்கும்.இதனை பயன்படுத்தி குறைவான எடையுடைய பொருள்களே கடைக்கார் நமக்கு தருவார். சிலர்  ஒரு கிலோ படியில் 50 கிராம் படியை சீவி எடுத்து விடுவார்கள். ஒரு கிலோ என சரியாக நிறுத்தாலும் 950 கிராமே நமக்கு கிடைக்கிறது.

இதனை ஒளவையார்  இரண்டு வார்த்தைகளில் அழகாக தன் ஆத்திச்சூடியில் சொல்லியிருப்பார். ”அஃகம் சுருக்கேல்” என தனது ஆத்திச்சூடியில் 13 ஆவது நூற்பாவாக கூறுகிறார். 



            'அஃகம்’ என்பது தானியம். ’சுருக்கேல்’ என்பது அளவில் குறைத்து விற்காதே என்ற பொருளில் வரும். அதாவது தானியங்கள் முதலிய பண்டங்களை அளவில் குறைத்து வியாபாரம் செய்யக் கூடாது என்பதே அதன் பொருள். ஒளவையார் காலத்தில் தானியங்களை மட்டுமே அளவில் குறைத்து விற்று வந்தனர். அதனால் அவர் அதனை கூறியிருப்பார். ஆனால் இது தானியத்தை மட்டும் குறிப்பதில்லை. இது ஒரு குறியீடு. 


வாங்கும் பொருட்கள் மட்டுமல்லாமல் எந்த சேவையானாலும் (கல்வி, மருத்துவம்,  நீதி, அன்பு, வேலை,படிப்பு,உதவுதல்) வாங்கும் ஊதியம் அல்லது கட்டணத்துக்குக் குறைவான சேவை அஃகம் சுருக்குதல்தான். நமக்கு கொடுக்கப்பட்ட காலத்தை சரியாக பயன்படுத்தாமல் வீணடிப்பது கூட அஃகம் சுருக்குதல்தான்.



            நாம் வாங்கும் ஊதியத்துக்கு குறைவான வேலையை செய்துகொண்டிருந்தால் அதுவும் அஃகம் சுருக்குதல்தான். ஆத்திச்சூடியில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளில் ஒரு வரி தான் அஃகம் சுருக்கேல். அதுவும் தமிழ் எழுத்துக்களில் புறக்கணிக்கப்பட்ட  எழுத்தான  ஃ ஐ பயன்படுத்தி ஒளவையார் உருவாக்கியதனால் இன்னும் அதன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. 


        இன்று ஔவையின் ஆத்திச்சூடி வாசகம் ‘அஃகம் சுருக்கேல்’ நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றும். சுயநலம் பெருகியுள்ள இந்நாட்களில் ஔவையார் கூறிய இந்த நெறிமுறையை பின்பற்றுவது, சமூகம் நன்னெறியிற் செல்லுதற்குப் பெரிதும் உதவும்


Thanks to Mr. Bergin sir.

No comments

Popular Posts

Powered by Blogger.