NMMS SAT Study Material - 02

NMMS Study Material


Seventh Social Science - 02


 Special Guide 


Click here to download

 

Nmms study material தரவிறக்கம் செய்பவர்கள் வாய்ப்பு இருப்பின் கீழுள்ள கதையை படியுங்கள்



அளவுக்கு அதிகமாக நேரம் தூங்கும் தூக்கத்தை கும்பகர்ண தூக்கம் என கூறுவார்கள். தூக்கம் என்றாலே அனைவருக்கும் கும்பகர்ணன் தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால் அதே ராமாயணத்தில் அளவுக்கு அதிகமாக தூங்கும் மற்றொருவரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தான் ஊர்மிளை. ராம காவியத்தில் அதிகம் பேசப்படாத ஒரு பெண்.



ராமர் வில்லை உடைத்து ஜனகரின் மகளான சீதையை மணந்து கொண்டார். சீதையின் தங்கை தான் ஊர்மிளா. ராமருடன் சென்ற அவரது தம்பி அண்ணனுக்கு ஒரு சேவகனாக நின்று பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் சீதையின் தங்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சீதைக்கு துணையாக ஊர்மிளையை அனுப்புவதற்காக இலக்குமணனுக்கு மனைவியாக்கி அனுப்பி வைத்தனர். இலக்குமணனுக்கு ஊர்மிளையின் மீது கொண்ட காதலை விட அவரது அண்ணன் மீது கொண்ட கடமை உணர்வே அதிகமாக இருந்தது.

அரண்மனையில் இருந்த காலத்திலும் புறக்கணிக்கப்பட்ட பெண்ணாகவே ஊர்மிளை இருந்தாள். தந்தையின் கட்டளையை நிறைவேற்ற கானகம் சென்ற ராமரோடு சீதையும் சென்றாள்.

கணவன் இருக்கும் இடமே மனைவியின் இருப்பிடம் என வாதிட்டு பிடிவாதத்துடன் காட்டுக்கு அவள் புறப்பட்டாள். இலக்குமணனும் ராமரோடு புறப்பட்டார்.ஆனாலும் தன் மனையியாகிய ஊர்மிளையிடம் கூட வருகிறாயா ? என்று கூட கேட்கவில்லை. மனைவியை தன்னுடன் கூட்டிச் சென்றால் தன் அண்ணனுக்கு தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவளை கூட்டிச் செல்ல விரும்பவில்லை.

தன் கணவரை பிரிந்திருக்க முடியாமல் ராமருடன் புறப்பட்ட சீதைக்கு தன்னுடைய தங்கையும் இலக்குவணனை பிரிந்திருக்கப் போகிறாள் என்ற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாமல் அவளை விட்டுவிட்டு தன் கணவரோடு காட்டுக்குச் செல்கிறாள்.

சீதையை ராமர் தன்னுடன் காட்டுக்குக் கூட்டிச் சென்றதற்கும் லக்குமணன் தன் மனைவியை எந்த அக்கரையுமின்றி அயோத்தியில் தவிக்கவிட்டுப் போனதற்கும் எந்த நியாயங்களையும் நாம் கற்பிக்க முடியாது. ஊர்மிளைக்கு இலக்குவணனின் மேல் இருந்த அன்பை விட பயமே அதிகமாக இருந்திருக்க வேண்டும்.அதனால் தாம் தன் உரிமையைக் கூட கேட்டுப் பெறமுடியாத நிலையில் அவள் இருந்தாள்.

கணவரை பிரிந்து 14 ஆண்டுகள் பிரிந்திருக்க வேண்டும் என்பதை நினைத்து ஊர்மிளை மிகவும் வருத்தப்பட்டார்.



காட்டுக்குச் சென்ற பின் முதல் நாள் இரவு உறக்கத்தின் தேவதையான நித்ரா இலக்குமணனிடம் வந்து தூங்க சொல்வார். அப்பொழுது இலக்குமணன் நித்ராவிடம்

வனவாசத்தில் இருக்கும் என் அண்ணனையும் அண்ணியையும் நான் பாதுகாக்க வேண்டியிருப்பதால், எனக்கு 14 வருடம் உறக்கம் தேவையில்லை என்று கூறினார்.

இக்கதை அடுத்த பதிவில் தொடரும்

No comments

Popular Posts

Powered by Blogger.