வனத்துறை கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 19-ல் சான்றிதழ் சரிபார்ப்பு

கள ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 19-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள கூட்டு வன மேலாண்மை பயிற்சி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வனத்துறை கள உதவியாளர்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த இணையதளத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான அழைப்பு கடிதங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அவற்றை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனைவரும் தவறாமல் வர வேண்டும் எனவும்,வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டது எனவும் தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Popular Posts

Powered by Blogger.