வேலைவாய்ப்பு
திருச்சியில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறவுள்ளது.
திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சீதக்காதி சேதுபதி ஸ்டேடியத்தில், ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறவுள்ளது.
இதில் சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் தொழில் நுணக்கமறிந்தவர், சிப்பாய் கிளார்க்,ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் டிஎஸ்சி பிரிவுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறவுள்ளது.
வயது 17 முதல் 23 வயது, வயது வரம்பு தேதி அக்டோபர் 1 ம் முதல் கணக்கிடப்படும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தி ல் ஜூலை 17 வரை பதிவு செய்ய வேண்டும்.
அழைப்பு கடிதம் ஜூலை 17 க்கு மேல் . என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர்(பொறுப்பு) முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
No comments