தனியார் ஆங்கில பள்ளிக்கு நிகராக ஓர் முன்மாதிரி அரசுப்பள்ளி - தொண்டி அரசு பள்ளி

தொண்டியில் ஆங்கில பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் திரை மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தொண்டியில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளியில் ஆங்கில பள்ளிகளுக்கு நிகராக கணினி வழி கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் திரை மூலம் பாடம், சீருடை, நாள் குறிப்பேடு, செயல் முறை விளக்க பாடம் என ஆங்கில பள்ளிக்கு இணையாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இப்பள்ளியில் மட்டுமே திரையில் பாடம் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செயல் வழிக்கல்வி என ஆடல் பாடல் மூலம் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போல், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக பாடம் நடத்தப்படுகிறது. வாழ்த்துப் பாடலை, ஆசிரியர்கள் சொல்லுவதை விட படத்தில் பாடலாக பாடும் போது மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் கூறுகையில், ஆங்கில பள்ளி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு இப்பள்ளியில் ஆங்கில பள்ளியை போன்றே அனைத்து மாணவர்களும் டை கட்டிய சீருடை அணிந்து வர வேண்டும். நாள் குறிப்பேடு (டைரி) அதில் அன்றாட பாடம் மற்றும் மாணவர்களின் கல்வி திறன் குறித்து எழுதப்பட்டிருக்கும். அதை பெற்றோர்கள் படித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் இதே முறையில் பாடம் நடத்தப்படுகின்றது. கணினி வகுப்பும் உண்டு. ஆங்கில வழி கல்வியும் எடுக்கப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளி இருக்கிறது. இதேபோல் அனைத்து அரசு பள்ளிகளும் மாறினால், தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களின் சேர்க்கை விகிதமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

நன்றி தின இதழ்


No comments

Popular Posts

Powered by Blogger.