குழந்தைகளுக்கு எட்டு நுண்ணறிவு உள்ளது. இவைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் இன்றைய கல்வி முறை இல்லையென்று பேராசிரியர் ஜகிதா பேகம் எழுதிய கட்டுரையை வாசித்தேன் திரு. ஜீ. ராமகிருஷ்னன்

குழந்தைகளுக்கு எட்டு நுண்ணறிவு உள்ளது. இவைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் இன்றைய கல்வி முறை இல்லையென்று பேராசிரியர் ஜகிதா பேகம் எழுதிய கட்டுரையை வாசித்தேன்.

அவரோடு தொடர்புகொண்டு பேசிய பிறகு, கடந்த 9/7/2016 அன்று அவரை காந்தி கிராமத்தில் நானும் எனது துணைவியாரும் சந்தித்தோம். அவர் ஒரு சிறந்த கல்வியாளர் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

ஜகிதா பேகம் அவர்களுடைய தந்தையார் புதுக்கோட்டை மகாராஜாவுக்கு உருது ஆசிரியராக இருந்தவர். 7 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், உருது, அரபி, இந்தி மற்றும் பார்சி) பாண்டித்தியம் பெற்றவர்.

அவரிடம் மகாராஜா, நீங்கள் பல்கலைக் கழகம் அல்லது பள்ளியில் ஏதாவதொரு பதவியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டபோது - 1 மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை கேட்டுப் பெற்றார் என்ற செய்தியை ஜகிதா பேகம் பகிர்ந்துகொண்டார்.

தனது பல்கலைக் கழக பணிகளை முடித்த பிறகு, வீட்டுக்கு அருகில் உள்ள 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

#பாராட்டுக்கள்

No comments

Popular Posts

Powered by Blogger.