டிப்ளமோ படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் எஸ்ஐ அந்தஸ்தில் பணி

புதுடெல்லியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனரகத்தில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐ அந்தஸ்திலான தொழில்நுட்ப பணிகளுக்கும், துணை மருத்துவ பணிகளுக்கும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

I. கட்டுமான பணிகள்:

1. Inspector (Architect): 

3 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1). 

சம்பளம்:  

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. 

தகுதி: 

ஆர்க்கிடெக்சர் பாடத்தில் பட்டப்படிப்பு. 

வயது: 

23.7.2016 அன்று 30க்குள்.

2. Sub Inspector/ Junior Engineer (Electrical): 

5 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 1,  எஸ்டி - 1). 

தகுதி: 

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ. 

வயது: 

23.7.2016 அன்று 30க்குள்.

3. Sub Inspector: 

12 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 1, எஸ்சி - 2, எஸ்டி - 4). 

மேற்கண்ட இரு பணிகளுக்கும் சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.

II. துணை மருத்துவ பணிகள்: 

1. Sub-Inspetor (Staff Nurse) (Group - B Post): 

3 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1,  ஒபிசி - 1). 

வயது: 

23.1.16 அன்று 21 முதல் 30க்குள். 

சம்பளம்: 

ரூ.9,300 -  34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. 

தகுதி: 

பிளஸ் 2 வுடன் பொது நர்சிங் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மற்றும் மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. ASI (Pharacist Qualified) (Group - C): 

15 இடங்கள் (பொது - 5, எஸ்டி - 4, ஒபிசி - 6). 

வயது:

23.1.2016 அன்று 18 முதல் 25க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800  

தகுதி: 

பிளஸ்2 வுடன் பார்மசி பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

3. CT (Masalchi) (Group C Post): 

1 இடம் (எஸ்சி). 

வயது: 

23.1.2016 அன்று 18 முதல் 23க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. 

தகுதி:  

மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு ஐடிஐ படிப்பு அல்லது ஓராண்டு முன்அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் 2 ஆண்டு ஐடிஐ/ டிப்ளமோ.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant (Rectt.),
Directorate General Border Security Force,
NEWDELHI.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.7.2016.

No comments

Popular Posts

Powered by Blogger.