புதிய மின்ணணு குடும்ப அட்டைகள் வினியோகம் எப்போது?

ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமை பெற்று பதிவுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னரே, மின்ணணு குடும்ப அட்டைகள் வழங்க இயலும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா காமராஜ் தெரிவித்துள்ளார்.
15.07.2016 மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின்கீழ், 1 கோடியே 91 இலட்சத்து 53 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் உன்னதமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்ணணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு நியாயவிலைக்கடைக்கும் வழங்கப்படும் இணைய இணைப்புடன் கூடிய விற்பனை இயந்திரத்தில் குடும்ப அட்டை எண், உறுப்பினர்களின் எண்ணிக்கை, கைபேசி எண், அட்டையின் வகை, எரிவாயு விவரம், ஆகியன மென்பொருள் பயன்பாட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விவரம் குறுஞ்செய்தியாக, குடும்ப அட்டைதாரரின் கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது 13 மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனைய மாவட்டங்களிலும் இப்பணியினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமை பெற்று பதிவுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னரே, மின்ணணு குடும்ப அட்டைகள் வழங்க இயலும்.
எனவே, அனைத்து அங்காடிகளின் பணியாளர்களுக்கும், இதற்கென நியமிக்கப்பட்டுள்ள மென்பொருள் நிறுவனத்தார் மூலம் இப்பணி தொடர்பான பயிற்சியை வழங்க, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆவன செய்ய வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டுமென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, கடந்த 5 ஆண்டுகளில், இதுவரை 16 இலட்சத்து 20 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரத்து 522 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயாராக உள்ளன என்றும் மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்றுவரை, 4 இலட்சத்து 85 ஆயிரத்து 123 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக இரண்டாம் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், இன்று வரையில், 5 இலட்சத்து 9ஆயிரத்து 184 மனுக்கள் பெறப்பட்டு 5 இலட்சத்து 8 ஆயிரத்து 412 மனுக்கள் மீது அன்றைய தினமே மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், மாதத்திற்கு ஒரு முறை, நுகர்வோர் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தி, அவற்றின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்து, மேல் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலையோர உணவகங்களிலும், வணிக நிறுவனங்களிலும் உணவு பொருட்களின் தரம் மற்றும் அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்கப்படுவதை, உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

No comments

Popular Posts

Powered by Blogger.