டிபார்ம் படித்தவர்கள் மத்திய அரசில் பார்மசிஸ்ட் ஆகலாம்

கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நல்வாழ்வு கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. பார்மசிஸ்ட் (அலோபதி):

11 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 2, எஸ்சி - 2).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி:

இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ்2 மற்றும் பார்மசி பாடத்தில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது பி.பார்ம் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் 1948 பார்மசி சட்டத்தின்படி பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 

22.7.2016ன்படி 18 முதல் 25க்குள். பொதுப்பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு 40 வயது வரையிலும், எஸ்சி., எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு 45 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.

2. பார்மசிஸ்ட் மற்றும் கிளார்க் (ஆயுர்வேதம்):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி:

இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆயுர்வேதிக் பார்மசி பாடத்தில் 2 ஆண்டுகளுக்கு குறையாத பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

வயது:

22.7.2016 தேதியின்படி 20 முதல் 30க்குள்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cghskolkata.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Director,
Central Government Health Scheme,
6- Esplande East, Ground Floor,
KOLKATA-700069.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 22.7.2016.

No comments

Popular Posts

Powered by Blogger.