அறிவியல் கண்காட்சியில் அசத்திய அரசு பள்ளிகள்
காரைக்குடியில் நடந்த புத்தாக அறிவியல் ஆய்வு விருதுக்காக நடத்தப்பட்ட அறியில் கண்காட்சியில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை விட அரசு பள்ளி மாணவர்கள் புதியனவற்றைக் கண்டுபிடித்து அசத்தினர். காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என 350க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்களே பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அசத்தினர்.
இதில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சபானா அடுத்த தலைமுறைக்கான டச் சுவிட்ச் (பெதர் டச் சுவிட்ச்) கண்டுபிடித்துள்ளார். அதேபோல் திருப்புவனம் ஊராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் ஜெயலட்சுமி ரயில் பெட்டியில் ஏறும் போது பயணிகள் கீழே தவறி விழாமல் இருக்க, ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் நிற்கும் போது பிளாட்பாரத்திற்கும் பெட்டிக்கும் இடையே ஒரு தகடு கொண்டு மூடும் வகையில் கண்டுபிடித்துள்ளார். இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் உயர், தொடக்கப் பள்ளி நிலையில் முதல்பரிசு பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments