வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உலகெங்கும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி தெரிந்துகொள்ள்.
நன்றாகப் படிக்கும் திறமையான மாணவர்கள் இந்த உதவித்தொகைகளைப் பெற முடியும். முக்கியமான சில உதவித்தொகைகளைப் பார்க்கலாம்.
ஐ.ஏ.எஃப்.எஸ். இன்டர்நேஷனல் ஸ்காலர்ஷிப்
வழங்குவது: American Institute for Foreign Study யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஏ.ஐ.எஃப்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 200 கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு.
எவ்வளவு: ஒரு செமஸ்டருக்கு 1000 அமெரிக்க டாலர்
விண்ணப்பிக்க: ஆண்டு முழுவதும்
கூடுதல் விவரங்களுக்கு: :www.aifsabroad.com/scholarships/asp#international
அயர்லாந்து ஸ்காலர்ஷிப்
வழங்குவது: யுனிவர்சிட்டி காலேஜ், அயர்லாந்து
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று அயர்லாந்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலைத்துறைகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: 2000 முதல் 3000 பவுண்ட்
விண்ணப்பிக்க: செப்டம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு:
www.ucd.ie/international/
லேர்ன் ஹப் ட்ரீம் ஸ்டடி அப்ராட் ஸ்காலர்ஷிப்
வழங்குவது: லேர்ன் ஹப் அமைப்பு
யாருக்குக் கிடைக்கும்: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தென் கொரிய நாடுகளில் லேர்ன் ஹப் அமைப்புடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அறிவியல், கலை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: ஒரு செமஸ்டருக்கு 2000 அமெரிக்க டாலர்
விண்ணப்பிக்க: செப்டம்பர் மாதம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு; www.learnhub.com
டாடா ஸ்காலர்ஷிப்
வழங்குவது: டாடா நிறுவனம்
யாருக்குக் கிடைக்கும்: +2க்குப் பிறகு அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடவியல், கலை, பொறியியல், மேலாண்மை மற்றும் அறிவியல் பிரிவுகளில் சேரும் 30 இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: கல்விச் செலவு முழுவதும்.
விண்ணப்பிக்க: ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்
கூடுதல் விவரங்களுக்கு: www.admissions.cornell.edu/apply/internationalstudents/tatascholarship
கல்வி தினகரன்
No comments