மாணவரை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் கைது

மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் பாண்டீஸ்வரன் என்னும் மாணவரை அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சந்திரன்(56) பாடப்புத்தகத்தை பார்த்து படிக்க சொன்னார். படித்து கொண்டிருந்தபோது மாணவனை உதவி தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர் தரப்பினர் எழுமலை காவல் துறையினர் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி தலைமை ஆசிரியர் சந்திரனை கைது செய்தனர்.

இது தொடர்பாக உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகாவிடம் மாணவர் தாக்கப்பட்ட விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments

Popular Posts

Powered by Blogger.