பயிறு குழம்பு / PAYARU KULAMBU

தேவையான பொருள்கள் :
காராமணி பயிறு – 1 கப்,
பச்சைப் பயிறு – 1 கப், தக்காளி – 2,
இஞ்சி (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம்,
பூண்டு (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம்,
பச்சை மிளகாய் – 3,
கடுகு, உளுந்து – தாளிக்க,
தேங்காய் (சிறிதாக நறுக்கியது) – 1 கப்,
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
பச்சரிசி (அரைத்தது) – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகாய்த் தூள் -10 கிராம்,
தனியா – 20 கிராம்,
நல்லெண்ணெய் – 25 மில்லி

செய்முறை :
காராமணி மற்றும் பச்சைப் பயிறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுந்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த பயிறுகளை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வறுத்து அரைத்த தனியா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
நைசாக அரைத்த பச்சரிசியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க
விடவும். இறுதியில், உப்பு சரிபார்த்து இறக்கினால் பயிறு குழம்பு ரெடி!

No comments

Popular Posts

Powered by Blogger.