சவால் மிகுந்த சி.ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழன் - ஸ்ரீராம்./ TAMIZAN SRIRAM PLACED FIRST RANK IN C.A EXAM

இந்தியளவில் நடைபெறும் தேர்வுகளில் சி.ஏ. தேர்வு (Chartered accountant) மிகவும் கடினமான ஒன்று. அதில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதே கடும் சவால். ஆனால், இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ   முதலிடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், இந்த ஆண்டு  ஸ்ரீராம் மூலம் தமிழகம் அந்தப் பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

ஸ்ரீராமின் யதார்த்த வார்த்தைகள்

''பெருசா ரிஸ்க் எடுத்து 24 மணிநேரமும் படிச்சேன்லாம் பொய் சொல்ல மாட்டேன். தினம் ரெண்டு மணி நேரம் மட்டும்தான் படிப்பேன். ஆனா, ஒரு நாள் கூட அந்த ரெண்டு மணி நேரம் மிஸ் ஆகாது. அன்னன்னைக்கு என்ன படிக்கணும்னு தெளிவா திட்டமிட்டு படிச்சிருவேன். எங்க அப்பா ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துல டெக்னீஷியன். அம்மா,  பத்மா பெரம்பலூர்ல மாவட்ட நூலக அலுவலர். குடும்பமும் நண்பர்களும் கொடுத்த ஆதரவில் கவனம் சிதறாமல் படிச்சேன். சிம்பிள்!'' என கண்சிமிட்டுகிறார் ஸ்ரீராம்.

7 ம் வகுப்பிலிருந்தே சி.ஏ படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார் ஸ்ரீராம். 2012-ல் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சி.ஏ படிப்புக்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டார். அந்த வருடம்  சி.ஏ படிப்பின் முதல்நிலை தேர்வில் 180/200 மதிப்பெண் பெற்று சேலம் அளவில் முதலிடம் பிடித்தவர், 2013-ல் சி.ஏ இன்டர் தேர்வில் 551/700 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் ஏழாம் இடம் பிடித்திருக்கிறார். 2014-ல் சி.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடமும். தற்போது இறுதி தேர்வில் 613/800 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடமும் பிடித்திருக்கிறார்.

நன்றி மாத இதழ் விகடன்

No comments

Popular Posts

Powered by Blogger.