நேர்படப் பேசு எனும் இணையவழி பேச்சுப் போட்டியின் முடிவுகள்

 

 


அனைவருக்கும் வணக்கம்

கலாம் அகாடமி சார்பாக நடைபெற்ற நேர்படப் பேசு எனும் இணையவழி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழைந்தைகளுக்கும், அவர்களை ஊக்குவித்து போட்டியில் பங்கேற்க வைத்த அனைத்து பெற்றோர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பங்கெடுத்த அனைத்து குழுந்தைகளும் தமிழின் உச்சரிப்பில் எம் நடுவர்களை வியக்க வைத்தனர் என்பதில் ஐயமில்லை,

போட்டியில் பங்குபெற்ற அனைவருமே வெற்றியாளரே.

வெற்றித் தோல்வி இரண்டுமே சமமாக பழகும் தன்மையை நாம் பெற்றிருந்தாலும், வளரும் குழந்தைகளுக்கு நாம் அப்பக்குவத்தை வளர்க்க சில நேரங்களில் தவறிவிடுகிறோம். எனவே முடிவு எதுவாயினும் இந்த நோய்த் தொற்று காலத்தில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதே மாபெரும் வெற்றி என்பதை குழந்தைகளின் மனதில் நிலை நிறுத்துங்கள்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் பேச்சுத் திறன், மற்றும் அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை பொருத்தே தீர்மானிக்கப்பட்டது.

யூடியூப்பில் பார்வை மற்றும் விருப்பம் பொருத்து தீர்மானிக்கவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளில் அனுப்பிய செய்திகளில் ஒரு செய்தியை இங்கே பதிய ஆசைப்படுகிறேன்

"எங்களிடம் பொத்தான் செல் தான் உள்ளது, அதனால் பக்கத்து வீட்டார் மொபைலில் இருந்து வீடியோ அனுப்புகிறேன், முடிவுகளை எங்கம்மா செல்லுக்கு மெசேஜா அனுப்புங்கள்"

இணைய உலகில் அடியெடுத்து வைக்காத அந்த குழந்தையின் நம்பிக்கையை ஒருபோதும் நான் குலைக்க விரும்பவில்லை,

முடிவுகளில் வெளிப்படைத் தன்மை காக்கவே "யூ டியூப்பில்" பதிவேற்றம் செய்தோம், அதிலும் பிரிவு -1 ல் கலந்து கொண்ட குழந்தைகளின் உரையை அங்கீகரிக்க மட்டுமே பதிவேற்றம் செய்தோம்

இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகளில் கலந்து கொண்ட குழந்தைகளின் உரையை மாணவ/மாணவியரின் நலன் கருதி பதிவேற்ற வில்லை

இனி முடிவுகளை பார்ப்போம். முடிவுகளை தயவுசெய்து நடுநிலை எண்ணத்தோடு ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

முதல் பிரிவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பங்கு பெற்றுள்ளதால் வெற்றியாளர்களை தேர்வு செய்வது சற்று கடினமானதாகவே இருந்தது, அனைத்து முடிவுகளும் எந்த பாரப்பட்சம் இன்றி எடுக்கப்பட்ட ஒன்றே,  வெற்றி பெற்றவர்கள் தங்கள் குழந்தையின் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் ஆகியவற்றை சான்றிதழில் பதிய, அனுப்ப கேட்டுக் கொள்கிறேன்

பங்கேற்ற அனைவரும் பங்கேற்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள Click here

முதல் இடம் இருவருக்கு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது

1. தி. அன்புமதி
மற்றும்
1. சா. முகமது இபின் சமீர்
2. ரஷ்மியா பானு
3. சு. அஞ்சனா

இரண்டாம் பிரிவில்

1. கோ. கோபிகா
2. மு. சங்கீத ரோஷ்னி
3. கோ. சோபனா ஸ்ரீ

மூன்றாம் பிரிவில்

1. ரா. ராதிஷா
2. ச. அனு ஸ்ரீ
3. மு. நஸ்ரின்

ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்

No comments

Popular Posts

Powered by Blogger.